Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாய்லாந்து மற்றும் மியான்மரில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 8 பேர் மீட்பு

நவம்பர் 10, 2022 12:57

மியான்மர் எல்லைப் பகுதிகளில் சட்டவிரோத தகவல் தொழில் நுட்ப வேலைகளில் பணியமர்த்துவதாக கூறி, தாய்லாந்து இணையதள வேலைகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும், அவ்வேலை களைச் செய்ய மறுத்தால், கடுமையாக தாக்கப்படுவதாகவும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் வீடியோ மூலம்  தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். மேலும், அவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு, அவர்களது குடும்பத்தினரும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானனின் உத்தரவின்பேரில், முதற்கட்டமாக 18 தமிழர்கள் அயலகத் தமிழர் நலத்துறை மூலம் விமானத்தில் அழைத்து வரப்பட்டனர். தற்போது இரண்டாம் கட்டமாக 8 தமிழர்கள் மீட்கப்பட்டு தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை விமான நிலையம்அழைத்து வரப்பட்டனர். அவர்களை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் அயலகத்தமிழர் நல
ஆணையரகத்தின் உயர் அலுவலர்கள் வரவேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தமிழகத்திலிருந்து இளைஞர்கள் பலர் தங்களுடைய வாழ்வாதாரத் திற்காக, பல்வேறு நாடுகளில் தகவல் தொழில்நுட்ப பணிக்காக செல்லும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் அவர்கள் பணிக்கு செல்கின்ற நேரத்தில், அவர்களுக்கு உரிய பணி வழங்கப் படாமல் மாற்றுப் பணியாக சட்டத்திற்கு புறம்பான பணிகள் வழங்கப் படுகிறது.அவற்றை அவர்கள் மறுத்த காரணத்தினால், பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்ற செய்திகள், ஊடகங்கள் மூலமாகவும் அவர்களது பெற்றோர்கள் மூலமாகவும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து, அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

முதற்கட்டமாக 18 நபர்களையும் இன்று 8 நபரையும் அழைத்து வந்திருக் கிறோம். இதில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரும் மீட்கப்பட் டுள்ளார்.நாளையும் பத்து நபர்கள் வருவதாக செய்திகள் வந்துள்ளது. அவர்களையும் வரவேற்று, அவர்களது இல்லத்தில் ஒப்படைக்கும் பணி தமிழக அரசு சார்பாகவும், எங்கள் துறை சார்பாகவும் நடைபெறும்.
 

தலைப்புச்செய்திகள்