Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விஷம் குடித்து பெயிண்டர் உயிரிழப்பு

நவம்பர் 10, 2022 02:36

கரூர்: கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம், சமத்துவபுரம் பகுதியை சேர்ந் தவர் மகாலிங்கம் (வயது 51), பெயின்டரான இவருக்கு, பழனியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், குடும்ப பிரச் சனை காரணமாக, மகாலிங்கம் தனியாக வசித்து வந்தார். இதனால், மன முடைந்த மகாலிங்கம், சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினார். 

இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த் தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரி ழந்தார்.  இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

தலைப்புச்செய்திகள்