Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சின்ன வெங்காயத்தின் விலை அதிகரிப்பு

நவம்பர் 10, 2022 04:15

சென்னையில் வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில், சின்ன வெங்காயம் இன்று கிலோ 120 ரூபாய்க்கு விற்பனை யாகிறது. ஒரு கிலோ பெரிய வெங்காயம் இன்று 44 ரூபாய்க்கு விற்பனை யாகிறது.பெரம்பலூர், அரியலூர், திருச்சி திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் அறுவடை குறைவாக செய்ததால் வரத்து குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

மேலும் இந்த விலையானது இந்த மாதம் முழுவதும் நீடிக்கும் என்பதை சென்னை கோயம்பேடு காய்கறி விற்பனையாளர்கள்  கூறுகின்றனர். தமிழ்நாட்டில் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், கடந்த மாதம் கிலோ 90 ரூபாய் வரை விற்பனையானது. சில நாள்கள் நீடித்த இந்த அதிகப்படியான விலை, பின்னர் படிப்படியாக குறைந்தது. தற்போது, மீண்டும்  வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

இந்த விலை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக வணிகர்கள் கூறுகின்றனர். வெங்காயத்தைப் போலவே‌, கடந்த வாரம் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேரட், இன்று 60ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கத்திரி, அவரை, பீட்ரூட், முள்ளங்கி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதால், இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்