Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேருக்கு கொரோனா

நவம்பர் 11, 2022 12:31

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை
வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,64,810பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாக தொற்றால் 6 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியான வர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப் பட்டவர்களில் இதுவரை 4,41,21,538பேர் குணமடைந்து வீடு திரும்பியனர். தற்போது 12,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று மட்டும் 1,38,075 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்