Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.225 கோடியுடன் முதலிடத்தில் தமிழகம்: பாரளுமன்ற தேர்தல்

மே 11, 2019 11:19

புதுடெல்லி: தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப்பொருள் கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாகனங்களில் பணம் கொண்டு சென்றவர்களிடம் இருந்து பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். 

நாடு முழுவதும் நடந்த அதிரடி சோதனைகளில் தென்மாநிலங்களில் இருந்தே அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இருந்தே அதிக அளவில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  

மக்களவைத் தேர்தலின்போது நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டவை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்களிலேயே இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

அது மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் ரூ.279.76  கோடி மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.  குறிப்பாக தமிழகத்தில் ரூ.3.65 கோடி மதிப்பிலான 2.21 லட்சம் லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அது மட்டும் இல்லாமல்,

நாடு முழுவதும் தேர்தல் ஆணையத்தால் ரூ.980 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தில் இருந்தே பெரும்பான்மையான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்கள் தமிழகத்தில் தான் அதிக அளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.709.54 கோடி மதிப்பில் 3,073 கிலோ தங்கம், வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தகவல்.

தலைப்புச்செய்திகள்