Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

நவம்பர் 29, 2022 01:50

புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது டிசம்பர் 6-ம் தேதி வழக்கு விசார ணைக்கு வரும் போது இருதரப்பு வாதங்களை கூற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தர விட்டனர். வழக்கை டிசம்பர் 13-ம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பன்னீர்செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். கடந்த ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க. வின் பொதுக்குழு கூட்டம் என்பது சென்னையில் நடைபெற்றது. 

இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப் பட்டார். இதை எதிர்த்து வழக்குகள் உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த வழக்கில் ஜூன் 23-ம் தேதிக்கு முந்தைய நிலை என்னவாக இருந்ததோ அதே நிலை தொடர வேண்டும். கட்சிக்கான பொதுக்குழு தேர்தல் நடத்தக்கூடாது என நீதிமன்றம் தடை விதித்திருந்தது. தற்போது அந்த தடையானது நீட்டிக் கபட்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தலைப்புச்செய்திகள்