Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சரிவு

டிசம்பர் 01, 2022 01:36

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக சரிந்து வருகிறது. நாள் ஒன்று ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா இப்போது மூன்று இலக்க எண் ணிக்கையில் பதிவாகி வருவது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 291 ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் 2 உயிரிழப்பு பதிவாகியுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறு பவர்கள் எண்ணிக்கை 4,767- ஆக உள்ளது. 

மொத்த பாதிப்புடன் ஒப்பிடும் போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக் கை 0.01 சதவிகிதமாக உள்ளது. குணம் அடைவோர் விகிதம் 98.80 சதவிகிதமாக உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.19 சதவிகிதம் ஆகும். இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூ சிகளின் எண்ணிக்கை 219. 92 கோடியை தாண்டியுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்