Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளது

டிசம்பர் 01, 2022 01:37

சென்னை: தமிழகத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், கிழக்கு திசை காற்றின் காரணமாக 5 நட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

சென்னையில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 5 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள் ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்