Saturday, 5th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி-மந்திரிகள் சுற்றுப்பயண செலவு 5 ஆண்டுகளில் ரூ.393 கோடி

மே 12, 2019 08:25

மும்பை:  மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் ஆர்வலர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் ஆகியோர் 2014-ம் ஆண்டு மே மாதம் முதல் மேற்கொண்ட வெளிநாடு, உள்நாட்டு சுற்றுப்பயணங்களில் செய்த செலவு விவரங்களை கோரி இருந்தார்.

அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் கூறி இருப்பதாவது:- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் மந்திரிகளும் 2014-15-ம் நிதியாண்டு முதல் 2018- 19-ம் நிதியாண்டு வரை மேற்கொண்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுப் பயணங்களில் மொத்தம் ரூ.393.58 கோடி செலவிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வெளி நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.263 கோடியும், உள்நாட்டு சுற்றுப்பயணங்களுக்கு ரூ.48 கோடியும் செலவிட்டுள்ளனர். மத்திய இணை மந்திரிகள் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ.29 கோடியும், உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.53 கோடியும் செலவு செய்துள்ளனர்.

இதில் அதிகபட்சமாக கடந்த 2014-15ம் நிதியாண்டில் பிரதமர் மோடி மற்றும் மத்திய மந்திரிகள் வெளிநாடு, உள்நாட்டு பயணங்களின் போது ரூ.88 கோடி செலவிட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்