Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காரைக்காலில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை

டிசம்பர் 06, 2022 12:41

காரைக்கால்: வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர் ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக் கை விடுத்து உள்ளனர். இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. 

இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத் தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற் றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர். காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்