Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் உண்ணாவிரத போராட்டம்

டிசம்பர் 06, 2022 01:26

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கம் வாழ்வாதாரா உரிமையை மீட்டெடுக்கும் விதமாக  தென்காசி மாவட்டத்தில் சிறப்பு  பயிற்றுநர்களுக்கு   நடக்கும் அவலநிலையை கண்டித்து தமிழக அரசுக்கும், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தை கண்டித்தும் மாபெரும் உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர், அதனைத் தொடர்ந்து முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது .ஒரு பணியாளர்களுக்கு கொடுக்கும்  உரிமையை கூட கொடுக்க மறுப்பதால் இதை  கண்டிக் கும் விதமாகவே மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.  மாவட்ட தலைவர் குருசாமி  தலைமையில், செயலாளர் தினகரன், பொருளாளர் து.கருணாகரன்  முன்னிலை யிலும் நடைபெற்றது.  பிரதான கோரிக்கையாக பணி ஆணை ஊதிய உயர்வு குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு நடைபெற்றது. போராட்டத்தில் சங்க உறுப்பி னர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்