Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆட்டோ டிரைவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

டிசம்பர் 20, 2022 06:11

திருச்சி: திருச்சியில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஓட்டும் ஆட்டோ டிரைவர்களுக்கும் அதிலிருந்து பிரிந்து தனியாக வாட்சப் குரூப் ஆரம்பித்து இயங்கும் மீட்டர் ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஆன்லைன் நிறுவன ஆட்டோ டிரைவர்கள், வாட்ஸ் அப் குரூப்பை எதிர்த்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இந்த நிலையில் இன்று 500க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குரூப் ஆட்டோ டிரைவர்கள், திருச்சி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.

அதில் ஆன்லைன் நிறுவனங்களுக்கு ஆட்டோ ஓட்டும்போது பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க வேண்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கணிசமான தொகையினை அந்த நிறுவனங்களுக்கு கமிஷனாக கொடுக்க வேண்டி இருக்கிறது.

எனவே எங்களது வாட்ஸ் அப் குரூப் ஆட்டோ டிரைவர்களை தொடர்ந்து தொழில் நடத்த கலெக்டர் அனுமதிக்க வேண்டும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
 

தலைப்புச்செய்திகள்