Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு பெண்கள் மட்டும் தேர்வு  மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தகவல் 

டிசம்பர் 22, 2022 07:47

நாமக்கல், டிச. 23- நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்,     வட்டார இயக்க மேலாண்மை அலகில், ஒப்பந்த அடிப்படையில் 5 வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் (கபிலர்மலை-1, எருமப்பட்டி-1, மோகனூர்-1, கொல்லிமலை-2  வட்டாரங்கள்) கீழ்க்கண்ட தகுதியின் அடிப்படையில் பெண்கள் மட்டும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

வட்டார ஒருங்கிணைப்பாளர் தகுதிகளாக ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், குறைந்தபட்சம் மூன்று மாத சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்போர் 28-வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அந்தந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் இதேபோன்ற திட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

மேற்கண்ட தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் எழுத்து  தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியான பெண்கள் தங்களது விண்ணப்பத்தினை 15.01.2023 தேதிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை அலகினில் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி சிங்  அழைப்பு விடுத்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்