Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திமுகவில் இணைந்த அதிமுகவினர்

டிசம்பர் 23, 2022 11:27

பாவூர்சத்திரம்:  தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் வடக்கு ஒன்றியம் ஏ.பி.நாடானூரைச் சேர்ந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய துணை அமைப்பாளர் சமுத்திரகனி, வள்ளியம்மாள்புரம் கிளை அமைப்பாளர் அருண்பாண்டியன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர்.

பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்த அவர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் மகேஷ்மாயவன், நிர்வாகிகள் செல்லத்துரை, அற்புதராஜ், தளபதி மணி, ராஜேஷ், நவரத்தினமணி, சங்கர்ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்