Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்கள் இதயதெய்வம் புரட்சித்தலைவருக்கு புகழஞ்சலிகள்- எடப்பாடி பழனிசாமி டுவீட்

டிசம்பர் 24, 2022 10:41

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசயல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.

அந்த பதிவில், " வாரி வாரிக் கொடுத்த வள்ளல், சத்துணவு திட்டம் தந்த சரித்திர நாயகர், மக்கள் இதயத்தில் நீக்கமற வாழ்ந்து வரும் இதயக்கனி, எம் தலைவன் அவர்களின் நினைவுநாளில் அவர் வகுத்து தந்த பாதையில் பயணிப்பதையே பெருமையென கொண்டு, புரட்சித்தலைவருக்கு எங்கள் புகழஞ்சலி " என்று குறிப்பிட்டிருந்தார்.

தலைப்புச்செய்திகள்