Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துத்திகுளம் பள்ளியில் கிறிஸ்துமஸ் சமூக நல்லிணக்க விழா

டிசம்பர் 24, 2022 02:17

 ஆலங்குளம். துத்திகுளம்இந்து நடுநிலை பள்ளியில் கிறிஸ்மஸ் சமூக நல்லிணக்க விழா நடந்தது.  பள்ளி நிர்வாகி எஸ்.எம். அருள்ராஜ் அடிகள் தலைமை வகித்தார்,  பி.டி.செல்வன்,  தலைமை ஆசிரியர் ஆரோக்கிய ராஜ்  முன்னிலை வைத்தனர் .

சிறப்பு விருந்தினராக மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி முத்து ஸ்டாலின் ,பாப்பாக்குடி ஒன்றிய கவுன்சிலர் வளர்மதி மைக்கேல்ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி பட்டதாரி ஆசிரியர் ஜோஸ்பின் தெரசா அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் ஆசிரியர்கள் ஜோசப் ஸ்டீபன், அந்தோணியம்மாள், , அமைப்பாளர் உஷாலா மழலைப்பள்ளி ரபீனாசஸ்மி, பாப்பாகுடி ஸ்டாலின்,  பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்