Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம்

டிசம்பர் 24, 2022 06:17

முன்னாள் மாணவர்கள்  சங்கம்சார்பில் 104 வருடங்களை கடந்த செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம்  தற்போது ஆரம்பிக்கப்பட்டது. சங்கத்தின் உதவியாக சுமார் 4 லட்சம் செலவில் மெயின் ஹால் கட்டிடம் பராமரிப்பு செய்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைப்படைத்தனர்..

ஓடுகள் உடைந்து மேற்கூரை மழை நீரால் பாதிக்கப் பட்ட நிலையில் இருந்த இந்த கட்டிடத்தை பாரம்பரியம் மாறாமல் புதுப்பித்து ஒப்படைக்கப்பட்டது.

பின்பு முன்னாள் மாணவர்கள் சங்கத் தலைவர் ஜவஹர்லால் நேரு செயலாளர் ராமசாமி பொருளாளர் ஆறுமுகம் தொழிலதிபர் துரைராஜ் சங்க நிர்வாகிகள் விழுதுகள்அறக்கட்டளை சேகர்.மாணிக்கம் முன்னாள் ஆசிரியர் செண்பக குற்றாலம் .மாரியப்பன்,மன்சூர் ஆகியோர் தலைமை ஆசிரியர் முருகேசனிடம் இரண்டு மாத கால பணிகள் நடந்து முடிந்ததும் ஒப்படைக்கப்படைத்தனர்.  

நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியர்கள்சமுத்திரகனி சுடர்மணி.கணினி ஆசிரியர் முருகன், வேளாண்மை ஆசிரியர் முருகேசன் ஆகியோர்பாராட்டினர். முன்னாள் மாணவர்கள் சங்கத்தைசசேர்ந்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மாணவர்களையும்  பொதுமக்களும் பாராட்டு தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்