Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாட்டில், செயின் பறிப்பு, ஈவ்டீசிங், வாகன திருட்டு குற்றங்களை தடுக்க வாகன ரோந்து திட்டம்

டிசம்பர் 24, 2022 06:20

தமிழ்நாட்டில், செயின் பறிப்பு, ஈவ்டீசிங், வாகன திருட்டு குற்றங்களை தடுக்க, புதியதிட்டம் அறிமுகம்! திருநெல்வேலியில் டி.ஜி.பி.சைலேந்திர பாபு தகவல்! திருநெல்வேலி,:- "நகரப்பகுதிகளில் நடைபெறும் செயின் பறிப்பு, ஈவ் டீஸிங் மற்றும் வாகன திருட்டு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறியவும், அது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுத்திடவும்,  24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் வாகன ரோந்து திட்டம், தமிழகத்தில் நேற்று  முதல்  அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த பணிகளுக்காக, ஒரு காவல் நிலையத்துக்கு 2 வாகனங்கள் வீதம், தமிழகம் முழுவதும் மொத்தம் 400 வாகனங்கள், அந்தந்த காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. ஒரு வாகனத்தில், 2 போலீசார் வீதம் சுழற்சி முறையில் பணியமர்த்தப் படுகிறார்கள்.திருநெல்வேலி மாநகரப்பகுதிகளில் மட்டும் மொத்தம் 69 வாகனங்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வரும்!" என, தமிழக காவல்துறை தலைவர் (D.G.P.) சைலேந்திர பாபு, இன்று (டிசம்பர்.24) பாளையங்கோட்டையில், இந்த புதிய வாகன ரோந்து  திட்டத்தை, கொடி அசைத்து துவக்கி வைத்த போது, இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக பாளையங்கோட்டை மைதானத்தில், பலன்தரும் மரக்கன்றுகள் பலவற்றை, சைலேந்திர பாபு நட்டார். நிகழ்ச்சியில், திருநெல்வேலி சரக காவல் துணைத்தலைவர் (D.I.G) பிரவேஷ்குமார், மாநகர காவல் ஆணையர் அவினாஷ் குமார், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

தலைப்புச்செய்திகள்