Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவகுருநாதபுரத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

டிசம்பர் 27, 2022 04:17

சுரண்டை: சுரண்டை நெசவாளர் தெருவில் சமுதாய நலக்கூடம் திறப்பு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விளையாட்டு விழா பரிசளிப்பு விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 நிகழ்ச்சிகளுக்கு சேகர தலைவர் ரெவ ஜெகன் தலைமை வகித்தார் சபை ஊழியர் ஜான், நாட்டாண்மை அற்புதராஜ், துணை நாட்டாண்மை சதீஷ் மோகன், கணக்காளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் ரூஸ்வெல்ட் வரவேற்று பேசினார் புதுச்சுரண்டை சேகர குரு ரெவ ஜெகன் சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

 நிகழ்ச்சியில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அன்னப்பிரகாசம், ராஜகுமார், சேகர செயலாளர் ஜேம்ஸ் அழகுராஜா, பொருளாளர் ஸ்டீபன் ஜெபராஜா மற்றும் ஜேக்கப், முன்னாள் துணை நாட்டாண்மை ஆனந்தராஜ், மற்றும் ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்