Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பள்ளி சிறுமி ஆராதனா கடிதம் : 

டிசம்பர் 27, 2022 06:50

பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி வினைதீர்த்தநாடார்பட்டியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்று வரும் தங்கராஜ் என்பவரின் மகள் ஆராதனா கடந்த மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை தனது கைப்பட எழுதி அனுப்பி இருந்தார்.

அதில் தங்கள் பள்ளிக்கு போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை அதற்கு ஏற்பாடு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தார் அதனை ஏற்று 8ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்க வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்டங்கள் வழங்கிய மேடையிலேயே சிறுமி ஆராதனாவின் கோரிக்கையினை ஏற்று இரண்டு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூபாய் 35.50 லட்சத்தை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டார்.

அதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் ஆராதனா கடிதம் ஒன்றை எழுதி தபால் மூலம் அனுப்பி உள்ளார் அதில் நான் அனுப்புன மனுவை ஏற்றுக் கொண்டு எனது பள்ளிக்கு நிதி ஒதுக்கிய முதலமைச்சர் ஐயாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் இதே பள்ளியில் படிச்சு பெரிய ஆளா ஆகணும்னு சொன்னீங்க ஐயா நிச்சயம் அதே மாதிரி நான் ஆவேன் ஐயா அப்போதும் நீங்களே முதலமைச்சர் ஆக இருக்கணும் ஐயா எங்க அம்மா அப்பா ஊர் மக்கள் என்னோட நண்பர்கள் எல்லோரும் சந்தோஷப்பட்டாங்க ஐயா உங்களை நேர்ல சந்தித்து நன்றி தெரிவிக்க ஆசையா இருக்கு ஐயா என்று எழுதியுள்ளார்.

மாணவியின் இந்த கடிதம் தற்பொழுது தமிழக முதல்வரின் நேரடி பார்வைக்கு சென்றுள்ளதால் முதல்வர் மு.க ஸ்டாலின் சிறுமி ஆராதனாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வண்ணம் நேரில் அழைத்து பாராட்டு தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்