Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெண்களுக்கான உரிமைகள் விழிப்புணர்வு போட்டிகள் பரிசளிப்பு 

டிசம்பர் 27, 2022 06:57

தென்காசி மாவட்ட சமூகநலன்(ம) மகளிர் உரிமைத்துறை மற்றும் தென்காசி வ.உ.சி வட்டார நூலகம் இணைந்து பெண்களுக்கான மருத்துவ உதவி, சட்ட உதவி, காவல் உதவி, உளவியல் ஆலோசனை, வீடு மற்றும் பணி இடங்களில் வன்முறை பாலியல் துன்புறுத்தல் , வன்கொடுமை, தற்கொலை எண்ணம், விரக்தி, மனசோர்வு, குழந்தை திருமணம், பாலியல் வன்கொடுமை, கருகலைப்பு, பெண் சிசுக் கொலை, விதவைகள் கொடுமை, முதியவர்களை கைவிடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண  உரிய ஆலோசனைகள், கவுன்சிலிங் நடத்திவரும் சகி - ஒன் ஸ்டாப் சென்டருடன் இணைந்து 
பெண்களுக்கான மேற்காணும் பிரச்சனைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு போட்டிகள் இன்று  நடைபெற்றது.


பேச்சு போட்டியில் - சுரேஷ் முதல்பரிசும் 
இளையரசன் இரண்டாம் பரிசும்உஷா மூன்றும் பரிசும் பெற்றனர்
ஓவிய போட்டியில்
மாகிரா முதல் பரிசும்
முஹம்மது ஆசிக் இரண்டாம் பரிசும்
கல்பனா மூன்றாம் பரிசும் 
பெற்றனர்.


விழாவில் கிளை நூலகர் சுந்தர்  ஒருங்கிணைந்த சேவைமைய நிர்வாகி  ஜெயராணி வழக்கு பணியாளர் நிஷா,  
புற தொடர்பு பணியாளர் அருணா நூலகர் ஜூலியாராஜ செல்வி வாசகர்வட்ட நிர்வாகிகள் சலீம் குழந்தை ஜேசு முருகேசன் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்