Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மூத்த வேளாண் வல்லுநர் பேரவையின்  குடும்ப சங்கம விழா

டிசம்பர் 28, 2022 03:16

நெல்லை: வேளாண்மை துறையில் பல்வேறு பணிகளில் பணியாற்றி பணி ஓய்வு பெற்ற வேளாண்பட்டதாரிகள்,  தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநர் பேரவை என்ற அமைப்பை நிறுவிச செயல்பட்டு வருகின்றனர்.


  பேரவை உறுப்பினர்கள் இருமாதங்களுக்கு ஒருமுறை ஒன்று கூடிக் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம். அந்தவகையில் இந்த முறை அந்த சந்திப்பு  நெல்லை கே.ஆர்.ஆர் திருமண மண்டப வளாகம் தங்கம் ரெஸிடென்சியில் " குடும்ப சங்கம விழா"வாக  நடைபெற்றது. கடந்த இருமாதங்களில் பிறந்தநாள் கண்ட உறுப்பினர்கள் வாழ்த்திக் கௌரவிக்கப் பட்டார்கள்.


கலந்து கொண்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கும்,  பெரியவர்களுக்கும்  வினாடிவினா உட்பட பல்வேறு  போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.  
விழாவில் "விஜய்டி.வி கலக்கப்போவது யாரு, சூரியன்எப்.எம் பெரியதம்பி" புகழ் நெல்லை ச.பிச்சுமணி கலந்துகொண்டு ஆனந்தம் விளையாடும் வீடு" என்ற தலைப்பில் பேசினார்.
உறுப்பினர்களுக்கு  2023 ம் ஆண்டுக்கான பேரவையின் மாதாந்திர காலண்டர் வழங்கப்பட்டது.

   இவ்விழா பேரவைத் தலைவர் முகமது இக்பால் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் குரு மூர்த்தி வரவேற்றார்.


பேரவையின் செயல்பாடுகளை செயலாளர் செந்தி வேல் முருகன் எடுத்துரைத்தார்.
பொருளாளர் சிந்தாமணி நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
இணை செயலாளர் சங்கரலிங்கம் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்