Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடி பாலியல் பலாத்காரத்தில் மோசமான அரசியல் செய்கிறார்: மாயாவதி

மே 13, 2019 05:47

ராஜஸ்தான்: 2018-ல் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் அல்வாரில் தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ் அரசை விமர்சனம் செய்தததுடன் மாயாவதிக்கும் கேள்வியை பிரதமர் மோடி எழுப்பினார். 

அல்வாரில் பட்டியல் இன பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணுக்காக மாயாவதி முதலைக்கண்ணீர் வடிக்கிறார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெறத் தயாரா?அந்த மாநில காங்கிரஸ் அரசும், இந்த சம்பவத்தை மறைக்க நினைக்கிறது என்றார் பிரதமர் மோடி. 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மாயாவதி, பிரதமர் மோடி பாலியல் பலாத்காரத்தில் மோசமான அரசியலை செய்கிறார் என சாடியுள்ளார். உ.பி.யில் பிரசாரம் செய்த மாயாவதி பேசுகையில், பிரதமர் மோடி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் மிகவும் மோசமான அரசியலை செய்கிறார். சட்ட நடவடிக்கை தவிர்க்கப்படும் போது பகுஜன் சமாஜ் கட்சி சரியான முடிவை மேற்கொள்ளும். பிரதமர் மோடி ஆட்சி காலங்களில் பல்வேறு தாக்குதல் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டது. அதற்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலக தயாரா? என பதில் கேள்வியை எழுப்பியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்