Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாலஅருணாசலபுரம், சாதனா வித்யாலயா பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடினர்

டிசம்பர் 29, 2022 04:53

கடையநல்லூர் : பாலஅருணாசலபுரம், சாதனா வித்யாலயா பள்ளியில் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாடினர். விழாவில் தமிழ் ஆசிரியை தீபா வரவேற்றார்.  முதல்வர் மயில் கண்ணு ரமேஷ் தலைமை தாங்கினார். தாளாளர் ரமேஷ் முன்னிலையில் வகித்தார்.   சிறப்பு விருந்தினராக சகோதரர் ராஜா, சகோதரி விஜி கலந்து கொண்டனர்.

 சகோதரி விஜி பொம்மலாட்டம் மூலமாக மாணவ மாணவிகளுக்கு இயேசுவின் பிறப்பு கிறிஸ்துவின் அவதாரம் கிறிஸ்தவ மதம் பற்றி கதை பாடல்கள் மூலமாக குழந்தைகளுக்கு எடுத்துக் கூறினார்.

மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியில் பங்கு கொண்டு சிறப்பு செய்தனர். வானவில் கருத்தாளர் சோனியா, ஆசிரியை மகேஸ்வரி, சௌமியா  ஆகியோர் வசனம்  வாசித்து  மாணவர்களுக்கான செய்தி வழங்கினர். ஆசிரியை சண்முகப்பிரியா,அன்பரசி அனிதா, கோமதி சங்கரி, ஆசிரியர் மகேஷ் ஆகியோர்  விழா ஏற்பாடு செய்தனர். இறுதியாக ஆசிரியர் பத்ரகாளி நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்