Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு

ஜனவரி 05, 2023 04:39

தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட     ஆட்சித் தலைவர் ஆகாஷ் இன்று வெளியிட்டார். அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக தென்காசி என மாவட்ட ஆட்சியர் தகவல்.
                                                                                                                     
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  இன்று  மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  தென்காசி மாவட்டத்தில்,  உள்ள சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1,19,099 ஆண் வாக்காளர்களும், 1,25,991பெண் வாக்காளர்களும்,  7 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,45,097 வாக்காளர்களும், வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1,17,626 ஆண் வாக்காளர்களும், 1,22944  பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலின  வாக்காளர்களும்  என மொத்தம் 2,40,577 வாக்காளர்களும், கடையநல்லூர் தொகுதியில் 1,39,515 ஆண் வாக்காளர்களும், 1,41,878 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம்  பாலின வாக்காளர்களும்  என மொத்தம்  2,81,406 வாக்காளர்களும், தென்காசி தொகுதியில் 1,43, 519 ஆண் வாக்காளர்களும், 1,50,239பெண் வாக்காளர்களும், 66 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,93,824 வாக்காளர்களும், ஆலங்குளம்  சட்டமன்ற தொகுதியில் 1,26,598 ஆண் வாக்காளர்களும், 1,33,974பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2,60,585 வாக்காளர்கள் உள்ளனர்.  தென்காசி மாவட்டத்தில் உள்ள  5 சட்டமன்ற தொகுதிகளிலும்  6,46,357ஆண் வாக்காளர்களும்,      6,75,026 பெண் வாக்காளர்களும்,  106 மூன்றாம் பாலின   வாக்காளர்களும் என மொத்தம்  13,21,489 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகாஷ் வெளியிட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும்  பெற்றுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கூறியதாவது : 

கடந்த நவம்பர் 9ஆம் தேதி அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட மாறுதலுக்கு 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 5 சட்டமன்ற தொகுதிகளிலும்  6,46,357ஆண் வாக்காளர்களும்,      6,75,026 பெண் வாக்காளர்களும்,  106 மூன்றாம் பாலின   வாக்காளர்களும் என மொத்தம்  13,21,489 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். மொத்தமாக 8536 கூடுதல் வாக்காளர்கள் உள்ளனர். 5 சட்டமன்ற தொகுதியில் அதிகமான வாக்காளர்கள் கொண்ட தொகுதி தென்காசி.

குறைவான வாக்காளர்கள் கொண்ட தொகுதி வாசுதேவநல்லுர் . மொத்த வாக்கு சாவடிகளின் எண்ணிக்கை 1506 இருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


பேட்டி : ஆகாஷ் (மாவட்ட ஆட்சியர், தென்காசி)

தலைப்புச்செய்திகள்