Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரத்தில் கனிமொழி எம்பி.பிறந்த தின விழா

ஜனவரி 05, 2023 06:45

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரத்தில் கனிமொழி எம்.பி.பிறந்த தின விழா நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக மகளிரணி செயலாளரும், துணை பொதுச்செயலாளருமான கனிமொழி எம்.பி.யின் 54வது பிறந்த தின விழா பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது.

ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை பங்கேற்று, 54 பேருக்கு தென்னங்கன்றுகளையும், கீழப்பாவூர் யூனியன் சேர்மன் 54 கிலோ லட்டுகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பேராசிரியர் இரா.சாக்ரடீஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ்குமார், முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் மகளிரணி நிர்வாகிகள் வைத்தீஸ்வரி, ஷாலிமேரி, ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேஸ்வரி, தர்மராஜ், முருகேசன், மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் விஜயன், விவசாய அணி துணை அமைப்பாளர் இட்லி செல்வன், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன், மருத்துவரணி துணை அமைப்பாளர் தீபன் சக்கவர்த்தி, நிர்வாகிகள் கபில்தேவதாஸ், மாஸ்டர் கணேஷ், டோமினிக்ராஜா, செல்வராஜ், குருசிங், முத்துபாண்டி, டேனியல், வக்கீல் அரிகிருஷ்ணன், ராஜாசிங், சுரேஷ், செந்தூர்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்