Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டையில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்.

ஜனவரி 18, 2023 06:56

செங்கோட்டையில் பாஜக வடக்கு ஒன்றியம் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்.
செங்கோட்டை :  செங்கோட்டை விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவில் திடலில் வைத்து தென்காசி வடக்கு ஒன்றியம் பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது.

போட்டிகளில் கலந்து  பள்ளி மாணவ, மாணவியா்கள் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனா். பல்வேறு போட்டிகள் நடந்தது. ..

விளையாட்டுப் பிரிவு மாவட்ட செயலாளர் விஷ்ணுகுமார் ஒன்றிய துணைத் தலைவர் சரவணன்  மற்றும் விளையாட்டுப் பிரிவு ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து போட்டிகளை சிறப்பாக  நடத்தி முடித்தனர்.

அதனைதொடா்ந்து விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு  மாவட்டத் தலைவர் ராஜேஷ்ராஜா தலைமைதாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ராமநாதன் , விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பொன்னுலிங்கம்(எ)சுதன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

தென்காசி வடக்கு ஒன்றிய தலைவர் ஐயப்பன் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினா் நிகழ்ச்சியில் ஒன்றிய பொதுச் செயலாளர் விஷ்ணு பிரியன்  விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் நிர்வாகிகள் மற்றும் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தலைப்புச்செய்திகள்