Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடையத்தில் இன்று வீரவணக்கநாள் திமுக பொதுக்கூட்டம்.

ஜனவரி 24, 2023 06:38

கடையத்தில் இன்று வீரவணக்கநாள் திமுக பொதுக்கூட்டம்.

கடையம், ஜன.25

கடையம் தெற்கு ஒன்றிய திமுக, மாவட்ட மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் கடையத்தில் இன்று (புதன்கிழமை) மாலை  6 மணிக்கு நடைபெறுகிறது. ஒன்றிய செயலாளர் ஆ.ஜெயக்குமார் தலைமை வகிக்கிறார். மாவட்ட கவுன்சிலர் மைதீன்பீவி கோதர்மைதீன், மாவட்ட துணை செயலாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகிக்கின்றனர். மாணவரணி துணை அமைப்பாளர் சசிகுமார் வரவேற்கிறார்.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், மாநில பேச்சாளர்கள் தமிழ் கா.அமுதரசன், செந்தூர்பாலகிருஷ்ணன் ஆகியோர் பேசுகின்றனர். இக்கூட்டத்தில் தொகுதி நிர்வாகிகள் ஆலடி எழில்வாணன், தமிழ்செல்வி, திவ்யா மணிகண்டன், பூங்கோதை சசிகுமார், கை.முருகன், ராஜாமணி, மேகநாதன், ஒன்றிய நிர்வாகிகள் பக்கீர்மைதீன் சேட், சுடலைமுத்து, வின்சென்ட், முல்லையப்பன் மாரி, பெருமாள், முகம்மது யாகூப், அய்யன்சாமி, ஜெயராணி அண்ணாத்துரை, அர்ச்சுணன், முருகன், சசிகுமார், ரவீந்திரன், சதாம் உசேன், முருகன், மாரியப்பன், புகாரிமீராசாகிப், மகேஷ்பாண்டியன்,
ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, சிவன்பாண்டியன், மகேஷ்மாயவன், செல்லத்துரை, மாரிவண்ணமுத்து, பேரூர் செயலாளர்கள் அழகேசன், ஜெகதீசன், லட்சுமணன், நெல்சன், மற்றும் அல்லாபிச்சை, கணேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜகாங்கீர், சுந்தரிமாரியப்பன், தமிழரசி, புஷ்பராணி, ரம்யாகுமார், சங்கர், ஆவுடை கோமதி, ஊராட்சி மன்ற லைவர்கள் பொன்ஷீலா பரமசிவன், ஜீனத்பர்வீன், ஜன்னத்சதாம், மலர்மதி,சுந்தரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் நாகூர்மீரான், சக்தி சுப்பிரமணியன், முத்துமாரி, சந்திரன் லதா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். முடிவில்  மாணவரணி சுரேஷ் நன்றி கூறுகிறார்.

தலைப்புச்செய்திகள்