Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எருமப்பட்டி அரசு பள்ளியில் எம்எல்ஏ நிதியில் நல உதவிகள்

ஜனவரி 25, 2023 01:15


எருமப்பட்டி: எருமப்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து டேபிள் பெஞ்ச் வழங்கும் விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு எருமப்பட்டி திமுக ஒன்றிய செயலாளர்  பாலசுப்பிரமணியன் தலைமை வைத்தார் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் செல்வராஜ், வடிவழகன் ஆகியோர் வரவேற்றனர். 

எருமப்பட்டி பேரூராட்சி தலைவர் பழனியாண்டி  முன்னிலை வகித்தார்.
 இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி கலந்து கொண்டு தனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 16 லட்சம் செலவில் இரண்டு பள்ளிகளுக்கும், தலா 50 பிஞ்சுகள் மற்றும் 50 டேபிள் வழங்கினார்.
 மேலும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பேசும் போது, பிளஸ் டூ தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பெருமாபட்டி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அணில் என்கிற உதயகுமார், கந்தசாமி, கவி, சதீஷ், சேகர், விக்டோரியா, செந்தில் மற்றும் ஆசிரிய பெருமக்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்