Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தென்காசி மாவட்ட அளவிலான NMMS இலவச மாதிரி தேர்வு

ஜனவரி 25, 2023 06:21

தென்காசி: பள்ளிக்கல்வித்துறை, தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், இசக்கி வித்யாசரம் பள்ளி இணைந்து இசக்கி வித்யாசரம் பள்ளியில் வரும் 29.01.2023 ஞாயிற்று கிழமை முதல் ஒவ்வொரு ஞாயிற்று கிழமை தோறும் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை NMMS  இலவச மாதிரி தேர்வினை  நடத்த உள்ளது. அனைத்து  அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் , மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதலாம்.

இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தென்காசி வட்டார நூலகத்தில் பதிவு செய்திட வேண்டும். வாராவாரம் தேர்வுகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9442185928 , 9944317543 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இந்த ஆண்டில் நடைபெறும் அரசு தேர்வில் வெற்றி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் நூலகத் துறை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது. சென்ற ஆண்டில் தென்காசி மாவட்டத்தில் மாவட்ட அளவில் 357 மாணவர்கள் வெற்றி பெற்று அரசு வழங்கும் 48 மாதங்களுக்கு (நான்கு ஆண்டுகள்) ரூ 1000 வீதம் பெறுகின்ற மாணவர்களுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்..  

மாவட்டத்தில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு வெற்றிகளை பெற இலவச மாதிரி தேர்வுகளை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     
                        
                                                                                         வ.உ.சி வட்டார நூலகம்
                                                                                                    தென்காசி

தலைப்புச்செய்திகள்