Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டையில் நகர்மன்ற அவசரக்கூட்டம் நடந்தது.

ஜனவரி 25, 2023 07:31

செங்கோட்டை :  செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில் வைத்து அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவா் இராமலெட்சுமி தலைமைதாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், ஆணையாளா் (பொ)ஜெயப்பரியா, சுகாதார அலுவலா் இராமச்சந்திரன், ஆய்வாளா் பழனிச்சாமி, பொறியியல் பிரிவு மேறபார்வையாளா் காந்தி கணக்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலைவகித்தனா்.

கூட்டத்தில் 5வது வார்டு உறுப்பினா் ஜெகன் பேசும்போது தற்போது நகர்மன்ற கூட்டம் குறித்த சுற்றரிக்கை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளதால் அதை படிப்பதும் பொருள் அறிவதும் உறுப்பினர்களுக்கு சிரமத்தை தருகிறது எனவே மறு அஜண்டா வழங்க வேண்டும் அல்லது கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டுமென பேசினார்.

மேலும் தனது வார்டு பகுதிகளில் நாய்தொல்லை அதிகரித்து உள்ளது. அதை தடுக்க நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.

அதனைதொடா்ந்து நகர்மன்ற தலைவா் மற்றும் ஆணையாளா் இனி இதுபோல் தவறு நடக்காது அடுத்த முறை கண்டிப்பாக நீங்கள் எளிதில் புரியம்படி தமிழில் மட்டுமே இருக்கும் மேலும் நாய்த்தொல்லை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி கூட்டம் நடக்க ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொண்டார்.

1வது வார்டு சுப்பிரமணியன் பேசும்போது எனது வார்டு பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது எனவே கொசுமருந்து அடித்து தரக் கேட்டுக்கொண்டார். 8வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் எஸ்எம்.ரஹீம் பேசும்போது எனது வார்டு பகுதிகளில் இதுவரையில் எந்தவித பணிகளும் நடைபெற வில்லை எனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை எனவே எனது வார்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகள் நடைபெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அப்ருவல் இல்லாத மனைகளுக்கு அப்ருவல் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதேபோல் மற்ற உறுப்பினா்களும் தனது வார்டு பகுதிகளில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து பேசினா். கூட்டத்திற்கு நகர்மன்ற உறுப்பினா்கள் வேம்புராஜ், செண்பகராஜன், ராஜ்குமார், பொன்னுலிங்கம், இசக்கித்துரைபாண்டியன், முருகையா, மேரிஅந்தோணிராஜ், பேபிரெசவுபாத்திமா, இசக்கியம்மாள்மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனா். முடிவில் மன்ற தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

தலைப்புச்செய்திகள்