Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீவநல்லூரில் சிறுதானிய கண்காட்சி

ஜனவரி 26, 2023 06:45

செங்கோட்டை சீவநல்லூர் கிராம சபை கூட்டத்தில் சிறுதானிய கண்காட்சி * 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு  தமிழ்நாடு அரசு கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்டுள்ளது.

வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் செங்கோட்டை வட்டாரம் சீவநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி தலைவர் முத்துமாரி தலைமையில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் முன்னிலையில் 2023சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு சிறுதானியத்தின் சிறப்பு பற்றி விளக்கிக் கூறி கண்காட்சி நடைபெற்றது.

துணை வேளாண்மை அலுவலர் சேக் முகைதீன் பொதுமக்களிடம் பேசும் போது விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் சிறிதேனும் சிறுதானியங்களை சாகுபடி செய்யப்பட வேண்டும் பொதுமக்கள் தங்கள் அன்றாட உணவில் சிறுதானியங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என விளக்கி கூறினார்.

கண்காட்சியில் கம்பு, சோளம், மக்காச்சோளம், ராகி, திணை, சாமை உள்ளிட்ட சிறுதானியம் மற்றும் மிகச்சிறு தானியங்களை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் துரைப்பாண்டி, குமரன், ரகுநந்தன், ராஜ், சஞ்சீவி, செந்தில்குமார், வெயிலுமுத்து ,வல்லரசு, மணிகண்டன் ஆகியோர் கண்காட்சியாக அமைத்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கிராம ஊராட்சியின் செயலாளர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.உதவி வேளாண்மை அலுவலர் சம்சுதீன் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்