Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் பல்வேறு போட்டிகள்

ஜனவரி 27, 2023 08:11

சேரன்மாதேவி ஸ்காட் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில், எக்ஸ்சலன்சியா என்னும் தொழில்நுட்பம், கலை மற்றும் விளையாட்டு போட்டி இரண்டு பிரிவாக நடைப்பெற்றது.


    இதன் ஒரு அங்கமான இன்டலிஜன்ஸ் ஹன்ட் போட்டி தேர்வு நடைபெற்றது. இதில் 23க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து சுமார் 320க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி புனித ஜொசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஜெபவாசினி முதல் மதிப்பெண் பெற்று ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றார். அகஸ்தியர் பட்டி கேம்பிரிட்ஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முகப்பிரியா  இரண்டாம் மதிப்பெண் பெற்று ரூபாய் 5,000 பெற்றார். சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி
மூன்றாம் மதிப்பெண் பெற்று ரூபாய் 3,000 பரிசு பெற்றார்.


இதன் தொடர்ச்சியாக ஸ்கில் பிஸ்ட் கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 35க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1250க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்களுடன் பங்கேற்றனர். ஒட்டு மொத்த புள்ளி பட்டியலில் செயின்ட் இக்னேஷியஸ் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளி முதல் இடம் பிடித்தது.


இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருப்பதி பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் 10,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 5,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 3,000 வழங்கினார். பின்னர் வெற்றி பெற்ற  மாணவ , மாணவிகளுக்கு ரொக்க பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கினார்.

இதில் பொது மேலாளர், (ஸ்காட் வளாகம்) தம்பிதுரை, அட்மிஷன் இயக்குநர் முனைவர் ஜான் கென்னடி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தினர். 
 இப்போட்டியானது முதல்வர் முனைவர் சுந்தரராஜன், நிர்வாக அலுவலர் ஜெயபாண்டி முன்னிலையில் நடைப்பெற்றது.


ஸ்காட் கல்விக்குழுமத் தலைவர் முனைவர். கிளிட்டஸ் பாபு மற்றும் நிர்வாக இயக்குநர் அருண் பாபு அனைத்து மாணவ மாணவிகளையும் வாழ்த்தினார்கள்.

தலைப்புச்செய்திகள்