Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினம்

ஜனவரி 30, 2023 07:06

மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினமான தியாகிகள் தினத்தில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் செட்டிகுளம் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் 1000 பேருக்கு, கல்வி உபகரணங்கள் வழங்கிய, முன்னாள் எம்.பி.! திருநெல்வேலி,ஜன.30:- அண்ணல் மகாத்மா காந்தியடிகளின், 74-வது "நினைவு தினம்" இன்று (ஜனவரி.30) நாடெங்கும், தியாகிகள் தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்நாளையொட்டி, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், ராதாபுரம் தாலுகா,  
"செட்டிகுளம்"  பகுதியில் அமைந்துள்ள, அரசு மேல்நிலைப்பள்ளியில், இன்று (ஜனவரி.30) காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், அ.தி.மு.க.(எடப்பாடி அணி) நெல்லை மாவட்ட பொருளாளருமான பி.சவுந்தர் ராஜன்,  மாற்றுத்திறனாளி மாணவ- மாணவியர் நான்கு பேர்களுக்கு, கல்வி ஊக்கத்தொகையாக, தலா 1000 ரூபாய், "ரொக்கப்பரிசு" வழங்கி, வாழ்த்தினார்.

அத்துடன், அப்பள்ளியில் பயின்று வரும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட, அதாவது அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும், கல்வி உபகரணங்கள் மற்றும் புத்தம்புதிய தரமிக்க குளிர்பானங்களையும் வழங்கி, உற்சாகப்படுத்தினார்.


அப்போது பேசிய, முன்னாள் எம்.பி. சவுந்தர்ராஜன், "வரலாற்று சிறப்புமிக்க, இந்தப்பள்ளியில் பயிலும், மாணவ மாணவியர்களாகிய நீங்கள், கல்வியை நன்றாகக் கற்று, நம்முடைய இந்திய திருநாட்டிற்கும், உங்களுடைய வீட்டிற்கும்,இந்த பள்ளிக்கும், பெருமை சேர்க்க வேண்டும்.

கடந்த ஆண்டுகளை விட, இந்த கல்வி  ஆண்டு (2022-2023) பயிலும் அனைத்து மாணவ மாணவியரும், நன்றாக கல்வி கற்று வருவதாக, தலைமை ஆசிரியை  தெரிவித்தார். அதனை கேட்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்தோம்!"- என்று குறிப்பிட்டார்.

முன்னதாக தியாகிகள் தினத்தை முன்னிட்டு,நமது நாட்டின் விடுதலைக்காக,  தங்களுடைய  இன்னுயிரை ஈந்த,  தியாகிகளை போற்றிடும் வகையில், அனைவரும் எழுந்து நின்று, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி பொன்குமாரி, பெற்றோர்-ஆசிரியர் சங்க தலைவர்   எல்.லிங்கதுரை, செயலாளர்  ஆர்.சிவலிங்கம், பொருளாளர் குமார வேலாயுதம், மற்றும் பள்ளி ஆசிரியபெருமக்ககள், மாணவ மாணவியர், மிகுந்த உற்சாகத்துடன், கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்