Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் பூலாங்குளத்தில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா

ஜனவரி 30, 2023 07:22

பாவூர்சத்திரம் : கீழப்பாவூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண வெற்றி விழா பூலாங்குளத்தில் கொண்டாடப்பட்டது. வட்டார தலைவர் தங்கரத்தினம் தலைமை வகித்தார்.

முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரத்தினவேல்சாமி, வட்டார செயலாளர் மகாராஜா, கிராம கமிட்டி தலைவர் பொன்னுதுரை முன்னிலை வகித்தனர்.


சுரண்டை நகராட்சித்தலைவர் வள்ளிமுருகன் பங்கேற்று, கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயண விளக்க துண்டு பிரசுரங்களை அவர் விநியோகம் செய்தார்.

நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி தலைவர் எஸ்.ஆர்.பால்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, மாவட்ட செயலாளர் செல்லப்பா, மேற்கு வட்டார தலைவர் குமார்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ராதாகுமாரிமாரிமுத்து, வட்டார துணைத்தலைவர் துரைராஜ்பாண்டியன், லட்டு (எ) ரத்தினசாமி,  மகளிரணி ரெஜினா, கல்லூத்து ராமர், வட்டார காங்கிரஸ் செயலாளர் சொல்லின்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்