Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

பிப்ரவரி 01, 2023 02:02

தென்காசி : - தென்காசி மாவட்டம்,  ராஜபாண்டி ஊரில் அலுமினியம் பாஸ்பைட் செயல் விளக்கம். வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி இறுதியாண்டு
பயிலும் மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவ பாடத்திற்காக கீழப்பாவூர்
வட்டார பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

இதில் உதவி வேளாண் இயக்குநர் சேதுராமலிங்கம், வேளாண் அதிகாரிகள் தலைமையில் மற்றும் தங்கப்பழம் வேளாண்மைக் கல்லூரி முதல்வர் ராமலிங்கம் உதவி பேராசிரியர்கள் பிராகாஷ் மற்றும் தினேகா இவர்களின் ஆலோசனையின் படி ராஜபாண்டி கிராமத்தில் தென்னை மரத்தில் காண்டாமிருகம் வண்டடை அலுமினியம் பாஸ்பைட் மாத்திரை மூலம் கட்டுப்படுத்தும் முறை அதனின் முக்கியத்துவம் குறித்து வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் அஸ்மித், அதிஷ்டராஜ், கோவிந்த, கோகுல்நாத், இசக்கிசிவா, ஜெகன்குமார், ராஜா, சக்திகாமேஷ், ஸ்ரீ பாலாஜி ஆகியோர் இணைந்து அலுமினியம் பாஸ்பைட் பயன்படுத்தும் முறை மற்றும் அதனின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு செய்முறையாக விளக்கம் அளித்தனர்.

தலைப்புச்செய்திகள்