Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில்,  தலை  விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!

பிப்ரவரி 01, 2023 07:11

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில்,  தலை  விரித்தாடும் தண்ணீர் பஞ்சம்!  ஊராட்சியும் போதிய தண்ணீர் தரவில்லை! விலைக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை! தண்ணீர் இன்றி,  கண்ணீரில் மூழ்கியுள்ள கூடன்குளம் மக்கள்! 


திருநெல்வேலி :- திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் கடலோரக் கிராமம் கூடன்குளம் ஆகும். ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் உள்ள  கூடங்குளம் தனி ஊராட்சி ஆகும். இந்த ஊராட்சி பகுதியானது, இயற்கையாகவே மழை குறைவாக பொழியும் பகுதி ஆகும். இதனால் இங்குள்ள குளங்கள்,  ஒருபோதும் முழுமையாக நிரம்பியது இல்லை.

நிலத்தடி நீர்மட்டமும், இந்த பகுதியில் உயர்ந்ததே இல்லை. இப்படிப்பட்ட கூடங்குளம் ஊராட்சி பகுதிகளில், மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான அளவுக்கு குடிநீர் விநியோகமும் செய்யப்படுவது இல்லை.  


தற்பொழுது, கூடங்குளம் ஊராட்சி மற்றும் அதனைச்சுற்றியுள்ள  பகுதிகளில்,  தண்ணீர் விற்பனைக்கும், ஊராட்சி நிர்வாகம்  தடை விதித்துள்ளது. இவற்றின் காரணமாக, கூடங்குளம் ஊராட்சி முழுவதும், குடிநீர்  இன்றி,  மக்கள் தவியாய் தவித்து, வருகின்றனர். இதற்கிடையே, அணுமின் நிலையம் இருக்கின்ற, பெருமைக்குரிய தொழில் நகரமான கூடன்குளம் ஊராட்சி பகுதியில், மக்கள் தொகையும், கணிசமான அளவுக்கு அதிகரித்து வருகிறது.

அதற்கேற்றவாறு, மக்களின் தண்ணீர் தேவைகளும், அதிகரித்து விட்டது.
தண்ணீர் தேவையை, பூர்த்தி செய்வதற்கும், அதற்கான தண்ணீரை கொண்டு வருவதற்குமான, தொலை நோக்கு திட்டங்கள் எதுவும், கூடங்குளம் ஊராட்சியில், 
இல்லை. இந்நிலையில்,இங்கு மக்களுக்கு  ஊராட்சி நிர்வாகம் சார்பாக  வழங்கப்படும்,  தண்ணீரும், உப்பு சுவையுடைய தண்ணீர் ஆகும். மேலும், இந்த தண்ணீரால், மக்களின் 50 சதவிகித தேவையைக்கூட,   பூர்த்தி செய்ய முடியவில்லை. இது மட்டுமல்லாமல்,
மத்திய அரசின், "ஜல்ஜீவன் திட்டம்" இதுவரை கூடங்குளம்   மக்களுக்கு, இன்னும் கிடைக்கவில்லை.


மனிதனின் அடிப்படை தேவையான தண்ணீர் பற்றாக்குறையால், மக்கள் உள்ளூர் தண்ணீர் வண்டி வியாபாரிகளிடம் விலைக்கு வாங்கியே, தங்களுடைய  தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர்.


அதேநேரம், சில தண்ணீர் வியாபாரிகள்… தங்கள் பட்டா நிலத்தில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து, நிலத்தடி நீரை  எடுத்து, வண்டிகள் மூலம், விற்பனை செய்து வந்தனர். அவர்களுக்கு தற்போது,கூடங்குளம் ஊராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்