Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!

பிப்ரவரி 01, 2023 07:14

திருநெல்வேலி :- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (D.G.P) சைலேந்திர பாபு உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்,  ஒவ்வொரு   புதன்கிழமையிலும்,  அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் அலுவலகத்தில்,  நடைபெற்று வருகின்றன.

அதன்படி, இன்று (பிப்ரவரி.1) காலையில், பாளையங்கோட்டை, சமாதானபுரம்,  மிலிட்டரி லைன் பகுதியிலுள்ள, திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ப.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மனு கொடுக்க வந்த மனுதாரர்களிடம் இருந்து, மொத்தம் 16 மனுக்களை பெற்றார்.

அதனை தொடர்ந்து, மனு தாரர்களிடம்  பேசிய, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் "கொடுக்கப்பட்டுள்ள மனுக்கள் மீது, உரிய நடவடிக்கைகள், விரைவில் எடுக்கப்படும்!" என உறுதி அளித்தார்.

அத்துடன், மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்கவேண்டுமென, சம்மந்தப்பட்ட  அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். முந்தைய வாரங்களில்  நடைபெற்ற, குறைதீர்ப்பு நாள் கூட்டங்களில் பெறப்பட்டு, நிலுவையில் இருக்கும், 37 மனுக்களின் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். மனுக்கள் தந்த மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டு, மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  மாரிராஜன் மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  ராஜு, மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  ஜெயபால் பர்னபாஸ், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  பொன். ரகு ஆகியோர்,  மனுக்களை விசாரித்து,  18 மனுக்களை,  முடித்து வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்