Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊரகப் பங்கேற்பு மதிப்பீீட்டை நடத்திய கிள்ளிகுளம் மாணவிகள்  

பிப்ரவரி 04, 2023 06:44

தென்காசி வட்டாரம் காசிமேஜர்புரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலம் இசக்கி பாண்டியன் தலைமையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பயின்று வரும் நான்காம் ஆண்டு மாணவிகள் நந்தினி, சுஷ்மா, சௌமியா, சினேகா, சுமி, மகேஸ்வரி மற்றும் ரிஸ்வானா ஆகியவர்கள் தங்களது கிராம தங்கல் பயிற்சியின் ஒரு அங்கமாக  கிராம மக்கள் இடைய  ஊரகப் பங்கேற்பு மதிப்பீீட்டை நடத்தி உள்ளனர். 


இதில் கிராமத்தின் வேளாண்மை சாா்ந்த சமூக வரைபடம், வள வரைபடம், நகா்வு வரைபடம், காலக்கோடு , வெண்படம் போன்றவற்றை செய்து காட்டி, கிராம மக்களுக்கு மாணவிகள் விளக்கமளித்தனா்.


பங்கேற்பு கிராமப்புற மதிப்பீட்டை (பிஆர்ஏ) பல்வேறு அமைப்பு முறைகளுடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட அத்தகைய கட்டமைப்பை விவரிக்கிறது, இது வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் உள்ள வேலைகளில் உள்ளூர் மக்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றிய அறிவைப் பெறவும், பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பகுப்பாய்வு செய்யவும் உதவுகிறது. சில தலையீடுகளை மேற்கொள்ளும் போது அல்லது எளிதாக்கும் போது செயல்முறை பற்றிய முடிவுகளை வழிகாட்டுவதற்கான ஒரு கட்டமைப்பை வைத்திருப்பது பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும்.

எனவே கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ஊரக பங்கேற்பு மதீப்பீட்டை நடத்தி, அதில் அக்கிராமத்தின் முழு விவரங்களை கண்டறிந்தனர். அப்பகுதியில் உள்ள இயற்கை வழங்கல் இருக்கும் வசதிகள் மற்றும் மக்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அவற்றை தீர்வு காணும் முறை, குறித்தும் வரைபடம் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


ஊரகப் பங்கேற்பு மதிப்பீீடு நடத்திய போது அக்கிராமத்தின் பிரச்சினைகளை கிராம மக்கள் கூறினர்.கோடை காலத்தில் மழையின்மையால் குற்றால அருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் அக்கிராமத்தில் விவசாய பாசனத்திற்கு நீர் இல்லாமல் 2-3 மாதங்கள் விவசாயிகள் வரட்சியை சந்தித்து வருகின்றனர்.

இக்கிராமத்தில் அதிக கனமழை அவ்வப்போது பெய்து வரும் காரணத்தினால் காய்கறி உற்பத்தியை குறைத்து விட்டதாக அக்கிராம விவசாயிகள் வருத்தமளித்தனர். கனமழையால் நஷ்டம் அடைந்த போதிலும் உரிய நஷ்டஈடு அரசு வழங்கவில்லை என புகார் அளித்தனர்.

விவசாய நிதி, ஏழை விவசாயிகள் அவர்களின் செல்வாக்கை அதிகரிக்கவும், உரிய அங்கீகாரம் கிடைக்கவும் நம் பிரதமர் நரேந்திர மோடி அரசு PMKISAN அல்லது கிசான் சம்மன் நிதி உதவியை அறிமுகப் படுத்தி மூன்று ஆண்டுகள் நிறைவு அடையும் நிலையில்  இக்கிராம விவசாயிகள் அந்த நிதி உதவியை பெறவில்லை எனக் கூறினர்.

 மேலும் வயலில் எலி தொல்லை அதிகரித்துள்ளதால் எலி அழிப்பதற்கு  அதிக பணம் செலவிடுவதாக வருத்தமளித்தனர். எனவே தென்காசி வட்டாரத்தில் முகாமிட்டுள்ள கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் எளிய முறையில் எலி கட்டுப்படுத்தும் நடைமுறைகளை விவசாயிகளுக்கு கூட்டம் கூட்டி எடுத்துரைத்தனர்.

விளைபொருட்களுக்கு உரிய விலையின்மை, உர விலை அதிகரிப்பு, பயிர் காப்பீடு கிடைக்காமை போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி நாடெங்கிலும் விவசாயிகள் போராடி வருகின்றனர். நாடெங்கிலும் அனைத்து விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு காசிமேஜர்புர விவசாயிகள் மட்டும் விதிவிலக்கா?


கடைசியாக மாணவிகள் தங்களின் கல்லூரி முதல்வர் டாக்டர் தேரடி மணி  , பாட ஆசிரியர் டாக்டர் தாமோதரன் மற்றும் டாக்டர் செந்தில்நாதன் , அவர்களது குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜோசப் மற்றும் தென்காசி வட்டாரம்   வேளாண்மை இணை இயக்குனர் திருமதி தமிழ்மலர் , வேளாண்மை துணை இயக்குனர்  திருமதி  கனகம்மாள், வேளாண்மை உதவி இயக்குனர்  திருமதி முகுந்தா தேவி ,வேளாண் அதிகாரி திரு சரவணன், உதவி வேளாண்மை அதிகாரி  பிரவீண் மற்றும் கலையரசி அவர்கள், பிடிஎம் திரு சங்கரநாராயணன், ஏடிஎம் திரு பாண்டி மற்றும் திரு டாங்கே  ஆகியோர் வழங்கிய வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்