Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காண்டாமிருக வண்டுகளை கண்டறிதல் செயல் விளக்கம்

பிப்ரவரி 07, 2023 06:06

செங்கோட்டை : தென்காசி வட்டாரம் காசிமேஜர்புரத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கிள்ளிகுளம் மாணவிகள் (மகேஸ்வரி, நந்தினி, ரிஸ்வானா, சினேகா, சௌமியா, சுமி மற்றும் சுஷ்மா) கிராமத் தலைவர் குத்தாலம் தலைமையில் நடைபெற்ற 
கூட்டத்தில் காண்டாமிருக வண்டுகளை கண்டறிவது, அதன் பாதிப்பு, அறிகுறி மற்றும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

வளர்ச்சியடைந்த வண்டுகள் தென்னையின் உச்சியில் விரிவடையாத குருத்துப்பாகத்தில் துளையிட்டு, மரத்தின் உள்ளே சென்று, வளரும் மொட்டுப்பகுதியை மென்று விடுகிறது. தாக்கப்பட்ட பாகம் போக எஞ்சிய குருத்து விரியும்போது, தென்னை மட்டை முக்கோண வடிவில், சீராக கத்தரியால் வெட்டியதுபோல் தோற்றமளிக்கும்.இவ்வண்டு தாக்குவதால் 10-15% மகசூல் குறையும். மொட்டுப்பகுதியை மென்றபின் மீதியாகும் மரச்சக்கையை உள்ளே சென்ற துவாரம் மூலம் அடிமட்டையின் இடுக்குகளிலிருந்து வெளியே தள்ளுகிறது.இதனை கட்டுப்படுத்த  உரக்குழிகளில் இருந்து காண்டாமிருக வண்டின் முட்டைகள், புழுக்கள், கூட்டுப்புழுக்களை பொறுக்கி அழிக்கவும். தாக்கப்பட்ட மடிந்துபோன மரங்களை தோப்பிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும். தோப்பை சுத்தமாக வைக்க வேண்டும்.  

கல்லூரி டீன் டாக்டர் தேரடி மணி, பாட டாக்டர் தாமோதரன்  மற்றும் டாக்டர் செந்தில்நாதன்    அவர்களது குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜோசப்,  தென்காசி வட்டார வேளாண்மை இணை இயக்குநர் தமிழ்மலர், வேளாண்மை துணை இயக்குநர் கனகம்மாள்,   வேளாண் அதிகாரி சரவணன்,   உதவி வேளாண் அலுவலர்கள் பிரவீன்,  செல்வி, கலையரசி, பிடிஎம் சங்கரநாராயணன், ஏடிஎம் பாண்டி மற்றும்  டாங்கே ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்