Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாவூர்சத்திரத்தில்  மாற்றுத் திறன் குழந்தைகளுக்கு  இலவச மருத்துவ முகாம்.

பிப்ரவரி 07, 2023 06:14

பாவூர்சத்திரம் : ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் த.பி.சொ.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் கீழப்பாவூர் வட்டார வளமையத்தில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு  இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.


கீழப்பாவூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தர்மராஜ் வரவேற்றார்.  மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர குமார் மற்றும் கீழப்பாவூர் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணபாரதி சிற்பபுரை ஆற்றினர்.


ஆசிரியர் பயிற்றுநர்  செல்வமீனாட்சி நன்றி கூறினார். மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.இம்மருத்துவ முகாமில் 100 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


இம்மருத்துவ முகாமில் மனநல சிறப்பு டாக்டர் சுரேஷ், கண் டாக்டர் முகம்மது
அப்துல்லா, காது,மூக்கு, தொண்டை சிறப்பு டாக்டர்  ஹரிஹரசுதன், எலும்பு மூட்டு சிறப்பு டாக்டர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாற்றுத் திறன் மாணவர்களுக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் நல அடையாள அட்டை 9, உதவி உபகரணங்கள் 23, பஸ் பாஸ் 31, இரயில் பாஸ் 27, ஆதார் எண் இணைப்பு 54 பராமரிப்பு உதவித்தொகை விண்ணப்பம் 22, யூடிஐடி அடையாள அட்டை விண்ணப்பித்தல் 4 கிடைத்திட ஏற்பாடு  செய்தனர். அலுவலர் ஜெயபிரகாஷ்  கலந்துகொண்டு மாற்றுத்திறன்  மாணவர்கள் 9 பேருக்கு அடையாள அட்டை, 3 நபர்களுக்கு மடக்கு சக்கர நாற்காலி மற்றும் முடநீக்கியல் சாதனம் ஒருவருக்கும் வழங்கினார்.

தலைப்புச்செய்திகள்