Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விவசாயிகளிடமிருந்து பெறப்படும் நெல்லுக்கு செஸ் வரி நீக்க வேண்டும்.

பிப்ரவரி 07, 2023 06:16

பாவூர்சத்திரம் :- கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க கூட்டம் அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் அன்பழகன் தலைமை வைத்தார்.


சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக திருநெல்வேலி கிளை மேலாளர்  பாரதி  கலந்து கொண்டு, அரிசி ஆலைகளுக்கென்று பிரத்தியோக கடன்கள் பற்றி அவர் பேசியதாவது...


5 ஆண்டுகளுக்கு எக்யூப்மென்ட் கடன், 15% கேப்பிட்டல் முதலீடு, 25% செக்யூரிட்டி வழங்கப்பட வேண்டும்.அப்கிரேட் கடன் வழங்கும் திட்டம், அரிசி ஆலை இயந்திரங்கள் எதுவானாலும் மீண்டும் இயந்திரங்கள் அமைக்க கடன் வழங்கப்பட்டு அதற்கான வட்டி தொகைக்கு 5 சதவீத மானியம் உண்டு பாஸ்ட் ட்ராக் மூலம் கார்ப்பரேட் கடன்கள் 10%, கேப்பிட்டல் முதலீடு வட்டி விகிதம் 5% சதவீத வட்டி மானியத்துடன் 6.95 % சதவீத வட்டியுடன் 25% செக்யூரிட்டி வழங்கினால் போதும் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விவசாயிகளிடமிருந்து  நேரடியாக கொள்முதல் செய்யும் நெல்லுக்கான செஸ் வரியை ரத்து செய்ய வேண்டும், 
மின் கட்டண உயர்வு என்பது அறுவடை காலங்களில் தேவை அதிகமாகவும், சாதாரண காலங்களில் தேவை குறைவாகவும் இருக்கும், அதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் பீக் ஹவர்  கட்டணம் மற்றும் கிலோ வாட் கட்டணம் உயர்வு விலக்கு அளிக்க வேண்டும்.

விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல்லுக்கு அடிப்படை விலை 30 ரூபாய் என்று நிர்ணயித்து நெல்லை தரமானதாக விவசாயிகளிடமிருந்து பெற வேண்டும், அதற்கான இயந்திரங்களை அந்தந்த நேரடி கொள்முதல் நிலையங்களில் நிறுவ வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

தலைப்புச்செய்திகள்