Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி கோரிக்கை மனு

பிப்ரவரி 07, 2023 07:48

சாம்பவர்வடரை பேரூராட்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்
அமைச்சர் நேருவிடம், சிவபத்மநாதன் கோரிக்கை மனு

சுரண்டை : சாம்பவர்வடரை பேரூராட்சி திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்என அமைச்சர் நேருவிடம், திமுக மாவட்ட செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை மனு அளித்துள்ளார்.


சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்துவின் கோரிக்கையை ஏற்று, தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:


சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட 14வது வார்டு பெரியகுளம் சாலை முதல் விந்தன் கோட்டை அழகிய மனவள பெருமாள் கோயில் இணைப்பு சாலையில், முற்றிலும் சிதிலமடைந்த தார்சாலையையும், மீதமுள்ள மண் சாலையை தார்சாலையாக அமைக்கவும், சாலையின் இருபுறமும் வெள்ள பாதுகாப்பு சுவர்கள்( தேவையான இடத்தில்) அமைக்கவும்  ரூ.4.50 கோடியும்,  மேலும் சாம்பவர்வடகரை பேரூராட்சி 12 வது வார்டு வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் நகரில் 550 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் மற்றும் குடிநீர் பைப் அமைத்து, பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.1 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்