Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரம் பாவை வித்யாஷ்ரம் பள்ளி மேல்நிலை மாணவர்களுக்கான ஆண்டு விழா  

பிப்ரவரி 07, 2023 08:18

ராசிபுரம் :-  ராசிபுரம் பாவை வித்யாஷ்ரம் பள்ளி மேல்நிலைமாணவர்களுக்கான ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார்.


விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சாகித்திய அகாடெமி விருது பெற்ற, குழந்தைகள் நுலாசிரியர் ஆயிசா நடராசன் கலந்து கொண்டார். மாணவத் தலைவர் வி.கே.அஸ்வத் அனைவரையும் வரவேற்றார்.

பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர்  மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவினை துவக்கி வைத்தார். பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் முதல்வர் எஸ்.ரோஹித் ஆண்டறிக்கை வாசித்தார்.


பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோப்பைகளும், பதக்கங்களும்  விழாவில்  வழங்கிய சிறப்பு விருந்தினர் ஆயிசா நடராசன் பேசும் போது, கல்வியே ஒரு மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்குகிறது. ஆசிரியர்களாகிய உங்களால் மட்டுமே மாணவர்களை ஒழுக்கமுடையவர்களாக உருவாக்க முடியும். அதனோடு மாணவர்களின் பலவீனத்தையும், பலமாக மாற்றி அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் மதிநுட்பத்தினையும், ஆற்றலையும் ஆசிரியர்கள் பெற்றுள்ளனர்.

பெற்றோர்களாகிய நீங்களும் பாகுபாடுகளின்றி, உங்கள் பிள்ளைகளின் ஆர்வமும், திறமையும் எது என்று கண்டறிந்து, அதனை ஊக்கப்டுத்தி அவர்களுக்கு பக்கபலமாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு உயர்ந்த பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் பெற்றிருக்கக்கூடிய மாணவர்களாகிய நீங்கள், உங்களுக்குரிய தனித்துவத்தோடு, தொடர் முயற்சியால் சாதனைகளை நிகழ்த்த வேண்டும். அதற்கு கைபேசியை கல்விக்கும், உங்கள் முன்னேற்றத்திற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேற்சொன்னபடி பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள், அதனோடு கல்வி நிர்வாகம் ஆகியோர் சீராக செயல்படும் போது, நாளைய சிறப்பான சமுதாயத்தினை உருவாக்கி மற்றவர்களுக்கு முன்னோடிய இருக்க வேண்டும் என்றார். 


தொடர்ந்து மாணவ,மாணவர்களின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் துணைத்தலைவர் டி.ஆர்.மணிசேகரன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், இணைச்செயலாளர் என்.பழனிவேல், பொருளாளர் மருத்துவர் என்.ராமகிருஷ்ணன், இயக்குனர்கள்  கே.செந்தில்(சேர்க்கை),  கே.கே.ராமசாமி (நிர்வாகம்), அவந்தி நடராஜன் (மாணவர் நலன்), பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் முனைவர் சி.சதீஸ், தி ஆர்ட் ப்ரூ நிறுவனத்தின் சிஇஓ., ராஜவேல்,  பாவை ஆலன் பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாகி பிரேம் கிஷோர் உள்ளிட்ட முதல்வர்கள், துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.

தலைப்புச்செய்திகள்