Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய நெடுஞ்சாலை அருகே கவிழ்ந்த எத்தனால் டேங்கர்லாரி போக்குவரத்து துண்டிப்பு பலத்த பாதுகாப்பு

பிப்ரவரி 10, 2023 06:59

குமாரபாளையம் :  குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டத்திலிருந்து எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பெட்ரோல் எரிபொருள் மூலப்பொருளான எத்தனால் எரிபொருளை சுமார் 40 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு ஏற்றிக்கொண்டு  லாரியின் ஓட்டுனர் சுப்பிரமணி கோவை மாவட்டம் இருகூர் பகுதிக்கு ஓட்டி சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கவுண்டனூர் பகுதியில் சாலையோரம் கவிழ்ந்தது.

லாரியில் இருந்த எத்தனால் எளிதில் தீப்பிடிக்கக் கூடியது என்பதால்,  சங்ககிரி,வெப்படை தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ பிடிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாகனத்தின் மீது தண்ணீர் பீச்சியடித்து வருகின்றனர்.

விபத்து சம்பவம் குறித்து வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு வரை தற்பொழுது போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டு வருகிறது.

தலைப்புச்செய்திகள்