Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, திடீரென தர்ணா போராட்டம் நடத்தி, பரபரப்பை ஏற்படுத்திய, கிராம மக்கள்! 

பிப்ரவரி 13, 2023 04:09

திருநெல்வேலி :- திருநெல்வேலி புறநகர் மாவட்டம், "ராமையன்பட்டி" ஊராட்சிக்கு உட்பட்ட, "வேப்பங்குளம்" கிராமத்தில் வசித்துவரும், பட்டியல் இன மக்களுக்கு பாத்தியப்பட்ட, "இடுகாட்டு நிலம்" தனி நபர் ஒருவரால், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, பட்டியல் இன மக்கள், அங்கு செல்வதற்கான நடைபாதையை பயன்படுத்த  முடியாமலும்,  இறந்தவர்களின் உடலை, இடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, தகனம் செய்ய முடியாமலும், வெகுவாக பாதிக்கப்பட்டு  உள்ளனர். இது குறித்து, மாவட்ட நிர்வாகத்திடம், எழுத்து மூலமாக, நேரடியாக பலமுறைகள் புகார் மனுக்கள் கொடுத்தும், இன்று வரையிலும், எந்தவொரு நடவடிக்கையும், மாவட்ட நிர்வாகத்தால், எடுக்கப்படவில்லை. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள,  "வேப்பன்குளம்" கிராம மக்கள், "மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம்" அமைப்பின், நிறுவனர்- தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாளான, இன்று (பிப்ரவரி 13) திங்கட்கிழமை காலையில், திருநெல்வேலி "கொக்கிரகுளம்" பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக, தரையில் அமர்ந்தும், படுத்துக் கொண்டும், திடீரென "தர்ணா" போராட்டத்தில்,  ஈடுபட்டு, கோரிக்கையை நிறைவேற்றித் தரக்கோரி, "கோஷம்" போட்டனர்.

இதனால் ,மாவட்ட  ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சிறிது நேரம்  பர-பரப்பு நிலவியது. பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீசார், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி, மாவட்ட நிர்வாகத்திடம் "மனு" கொடுக்கச் செய்தனர்.*************(*************
 

தலைப்புச்செய்திகள்