Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எலிகளை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விளக்கிய கிள்ளிகுள மாணவிகள்

பிப்ரவரி 13, 2023 04:16

செங்கோட்டை :- தென்காசி வட்டாரம்  குடியிருப்பு கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கிள்ளிகுளம் மாணவிகள் (மகேஸ்வரி, நந்தினி, ரிஸ்வானா, சினேகா, சௌமியா, சுமி மற்றும் சுஷ்மா) கிராமத் தலைவர்  தலைமையில் ஒரு கூட்டத்தை நடத்தினர், அந்தக் கூட்டத்தில் கிராம மக்கள் மிகவும்  ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கிள்ளிகுளம் மாணவிகள் ஏலிகளால் பயிர்களில் ஏற்படும் செதம் கண்டறிவது,  அதன் பாதிப்பு அறிகுறி மற்றும் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து பேசினர்.

துண்டுகளாய் வெட்டப்பட்ட இளம் நாற்றுக்கள். சீரற்ற, முறையற்ற துண்டுகளாய் வெட்டப்பட்டிருக்கும் துார்தண்டுகள், பருவத்தின் ஆரம்ப நாட்களில் வயலில் குழிகள் ஆங்காங்கே காணப்படும், கடுப்படுத்தும் முறைகள், காட்டுப்பூனைகள், பாம்புகள் மற்றும் பறவைகள் ஆகியவை நெற்பயிர் வயல் எலிகளை வேட்டையாடும் உயிரினங்கள் ஆகும்.

பப்பாளிப்பழம் வயலில் வைப்பது, எங்கெல்லாம் ஆட்டுக்கிடை அமர்த்துகிறோமோ, அந்த வயலில் எலி வாழாது.நொச்சி மற்றும் எருக்கலை செடியை வயல் சுற்றி வேலிப்பயிராக நட்டால், எலித் தொல்லை வராது.தங்கரளி கிளைகளை வயல்சுற்றி போட்டால் எலி வராது.

நெல் வயலில் எலியைக் கட்டுப்படுத்த ‘சணப்பு’ பூவை சிறிய துண்டுகளாக்கி, அதைப் பரவலாக அங்கு அங்கே வயலில் இட்டால், அதிலிருந்து கிளம்பு வாடையினால் எலிகள் ஓடி விடும்.பனை ஓலைகளை அருகில் ஆந்தை உட்கார குச்சியில் கட்டி வைத்தால் அதிலிருந்து கிளம்பும் ஓசையினால் ‘எலிகள்’ ஓடிவிடும்.எலி வலைக்கு அருகில் ஆந்தை உட்கார குச்சி வைத்தால் அது எலித் தொல்லையை குறைக்க உதவும்.எலி எண்ணிக்கையை குறைக்க ஒவ்வொரு பயிர் அறுவடைக்குப்பின்பு, எலி வலைத்தோண்டி எலிகளை அழிக்கவேண்டும்.எலிகளைக் கட்டுப்படுத்த, மூங்கில் கழிகளின் மீது வயர் சுற்றி பிடிக்க ஒரு பொறி செய்து பயன்படுத்தலாம்.எலியை அழிக்க, ஒரு பெரிய வட்ட வடிவமான மண் பானையை வயலில் தரைமட்டத்திற்கு புதைக்கவேண்டும். அதில் பாதியளவு களிமண் சாந்தை நிரப்பிவிடவேண்டும்.

ஒரு தேங்காய் தொட்டியில் எலி உணவு வைத்து அதைப் பானையின் உள்ளே வைத்தால், எலியை கவரும், கவரப்பட்ட எலியானது மண் சாந்தில் விழுந்து மேல் எழ முடியாமல் இறந்துவிடும்.ஊறவைத்த அரிசியை எலி கவரும் பொறியாக வைத்தால், நிறைய எலிகளைக் கவரும்.பசும் சாணத்தை வயலிலும், வரப்பிலும் வைத்தால், எலித்தொல்லைக் குறையும்.மாணவிகள் கிராம மக்களிடம் விளக்கமளித்தார்கள்.


கடைசியாக மாணவிகள் தங்களின் கல்லூரி முதல்வர் டாக்டர் தேரடி மணி  , பாட ஆசிரியர் டாக்டர் தாமோதரன் மற்றும் டாக்டர் செந்தில்நாதன் , அவர்களது குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜோசப் மற்றும் தென்காசி வட்டாரம்   வேளாண்மை இணை இயக்குனர்  தமிழ்மலர் , வேளாண்மை துணை இயக்குனர்    கனகம்மாள், வேளாண்மை உதவி இயக்குனர்  முகுந்தா தேவி ,வேளாண் அதிகாரி  சரவணன், உதவி வேளாண்மை அதிகாரி  பிரவீண் மற்றும் கலையரசி அவர்கள், பிடிஎம்  சங்கரநாராயணன், ஏடிஎம் பாண்டி மற்றும் டாங்கே  ஆகியோர் வழங்கிய வாய்ப்பிற்கு நன்றி தெரிவித்தனர்.
 

தலைப்புச்செய்திகள்