Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தேசிய குடற்புழு நீக்க நாள் கொண்டாட்டம்! எம்.எல்.ஏ., மேயர், துணைமேயர் பங்கேற்பு!

பிப்ரவரி 14, 2023 07:25

திருநெல்வேலி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய குடற்புழு நீக்க நாள் கொண்டாட்டம்! எம்.எல்.ஏ., மேயர், துணைமேயர் பங்கேற்பு!

திருநெல்வேலி :- ஆண், பெண் இருபாலர்கள் இடையே, ரத்த சோகை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் மற்றும் மன வளர்ச்சி பாதிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும், குடற்புழு நோயை அறவே ஒழித்திடும் நோக்கில், நமது இந்திய திருநாட்டில், ஆண்டு தோறும், பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி, "தேசிய குடற்புழு நீக்க நாள்" ( NATIONAL DEWORMING DAY) கொண்டாடப்படுகிறது.

கடந்த, 2015- ஆம் ஆண்டு முதல், நாடு தழுவிய அளவில், கொண்டாடப்பட்டு வரும் இந்நாளையொட்டி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆகியவற்றில் பயிலும் குழந்தைகளுக்கு, தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், "குடற்புழு நீக்க மாத்திரைகள்", இந்நாளில் வழங்கப்படுவது, வழக்கம்.

அதன்படி,  திருநெல்வேலி டவுணில் அமைந்துள்ள, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அங்கு பயிலும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு, குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சியினை, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு. அப்துல் வகாப், இன்று (பிப்ரவரி.14) காலையில், முறைப்படி துவக்கி வைத்தார்.

நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னிலை வகித்தார். மாநகராட்சி கவுன்சிலர்கள், தலைமையாசிரியர், ஆசிரிய- ஆசிரியைகள், பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்டனர். முன்னதாக "குத்துவிளக்கு" ஏற்றிவைக்கப்பட்டு,  நிகழ்ச்சிகள் தொடங்கின.

தலைப்புச்செய்திகள்