Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

செங்கோட்டையில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் அரசு மருத்துவமனையில் சீட்டி ஸ்கேன் வசதி செய்து தரக்கோரி தீர்மானம் நிறைவேற்றம்.

பிப்ரவரி 15, 2023 08:17

செங்கோட்டை : செங்கோட்டை வல்லம் ரோட்டில் உள்ள தெற்கு தெரு சேனைத்தலைவா் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நகர பாரதீய ஜனதா கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகரத்தலைவா் வேம்புராஜ் தலைமைதாங்கினார்.

நகரப்பார்வையாளா் சீனிவாசன், நகர்ப்பொதுச்செயலாளா் கோமதிநாயகம் ஆகியோர் முன்னிலைவகித்தனா். நகரப்பொதுச்செயலாளா் பாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனைதொடா்ந்து பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சீட்டி ஸ்கேன் வசதி செய்து தரக்கோரி தீர்மானம், .செங்கோட்டையில் பிரசித்தி பெற்ற  அருள்மிகு அறம்வளர்த்தநாயகி உடனுறை குலசேகரநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்து 12ஆண்டுகளுக்கு மேலாகி வருகிறது.

எனவே உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும், மேலும் அந்த கோவில் ரதவீதிகளில் மின் கம்பிகள் தாழ்வாக உள்ளது இதனால் ரத ஊர்வலத்திற்கு இடையூராக உள்ளது எனவே அதனை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உயா்த்தி தர ஆவண செய்யவேண்டும், செங்கோட்டை மேலுார் பகுதியில் பொதுமக்களின் அத்தயாவசிய தேவையான ரேசன் கடையை 12,13,14 ஆகிய வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைத்துதர வேண்டும்.

செங்கோட்டை வல்லம் ரோட்டில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது எனவே அந்தகடையை  வேறு இடத்திற்கு மாற்றித்தர வேண்டும், மேலும் புதியதாக சுப்பன்செட்டி பாலம் சுடலைமாடன் கோவில் அருகில் அமைய உள்ள டாஸ்மாக் கடை திறப்பிற்கு  நிரந்தர தடை விதிக்க வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்டதிற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச்செயலாளா் பாலகுருநாதன் கலந்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் நகரத்துணைத்தலைவா்கள் சுப்பிரமணி, பாலசுப்பிரமணி, சந்திரன், நகரச்செயலாளா்கள் முத்துமாரியப்பன், கணேசன், மாவட்ட ஓபிசி அணித்தலைவா் மாரியப்பன், மாவட்ட உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு துணைத்தலைவா் செண்பகராஜன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு துணைத்தலைவா் பேச்சிமுத்து, மாவட்ட கூட்டுறவு பிரிவு செயலாளா் வர்மாதங்கராஜ், மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலாளா் காளி, மாவட்ட ஓபிசி அணி செயற்குழு உறுப்பினா் பாலசுப்பிரமணி, நகர மருத்துவ அணி தலைவி டாக்டா்கவிதா, விவசாய அணித்தலைவா் ராமர், இளைஞரணி தலைவா் வீரசிவா, பொதுச்செயலாளா் ஸ்ரீராம்கார்த்திக், செயலாளா் முத்துக்குமார், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு தலைவா் ஆறுமுகநயினார், வர்த்தக பிரிவு தலைவா் கேகே.சுந்தரம், பிரச்சார பிரிவு தலைவா் நாணயகணேசன், துணைத்தலைவா் செல்வக்குமார், செயலாளா் சுபாஷ், தொழில்துறை தலைவா் முண்டப்பமூா்த்தி, சமூக ஊடக பிரிவு தலைவா் கிருஷ்ணகுமார், கல்வியாளா் பிரிவு கணபதிசுந்தரம், கிளைத்தலைவா்கள் வீரமணி, மீனாட்சிசுந்தரம், புதியவன், மாரிச்சாமி, முன்னாள் பொதுச்செயலாளா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் நகரப்பொருளாளா் இராம்குமார் நன்றி கூறினார்.

தலைப்புச்செய்திகள்