Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அட்மா திட்டத்தில் தோட்டக்கலை விவசாயிகள் கண்டுணர்வு பயணம்

பிப்ரவரி 15, 2023 08:26

பாப்பாக்குடி வட்டாரத்தில் அட்மா திட்டதிதன் கீழ் தோட்டக்கலை விவசாயிகள் "பாதுகாப்பான முறையில் சாகுபடி" என்ற தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள இந்திய இஸ்ரேல் காய்கறி மருத்துவ மையத்திற்கு கண்டுணர்வு பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.

பாப்பாக்குடி அட்மா வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் சுபவாசுகி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த கண்டுணர்வு பயணத்திற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுஜித், உதவி தோட்டக்கலை அலுவலர் மாத்யூ மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் இராஜாமணி ஆகியோர் செய்திருந்தனர்

இந்த காய்கறி மருத்துவ மையத்தில் முதலாவதாக விவசாயிகளுக்கு இந்த நிறுவனம் அமைக்கப்பட்டதன் நோக்கம், நிறுவனத்தில் மேற்கொண்டு வரும் பணிகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர் பிரகாஷ் படவிளக்கத்துடன் விவரித்தார்.

பின்னர் விவசாயிகள் நிழல் வலை மூலம் காய்கறி சாகுபடி செய்யப்படும் திடல்கள், பசுமை குடில் மூலம் சாகுபடி மேற்கொள்ளும் முறைகள் குறித்து நேரடியாக அழைத்து செல்லப்பட்டு விபரங்கள் தெரிவிக்கப்பட்டது.

இங்கு காலிபிளவர், தக்காளி, குடைமிளகாய், வெள்ளரி போன்ற காய்கறிகள் புதிய தொழில் நுட்பங்கள் மூலம் சாகுபடி மேற்கொள்வதையும், குழித்தட்டு முறையிலான நாற்று உற்பத்தி குறித்தும் நேரடி கள அனுபவம் பெற்றனர்.

மேலும் சாதாரண முறையிலான சாகுபடி மூலம் கடைக்கும் வருமானம் மற்றும் பசுமைக்குடில் சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாய் குறித்தும் விளக்கம் தெரிவக்கப்பட்டது.


விவசாயிகள் காய்கறி மருத்துவ மையத்தில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு உரக்கூடத்திற்கும் அழைத்து செல்லப்பட்டு மண்புழு உற்பத்தி முறைகள் குறித்தும் இயற்கை விவசாயத்தில் அதன் பங்கு குறித்தும் தெரிவிக்கப்பட்டது.


இந்த விவசாயிகள் கண்டுணர்வு பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 50 காய்கறி
சாகுபடி விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டனர்.

தலைப்புச்செய்திகள்